இந்தியாவில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் – உயிரிழந்தோர் விகிதம் 80 : 20 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 13,387 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,007பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், 23 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 6 நாட்களில் இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனோவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,749 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனோவை தடுக்க தடுப்பூசி மற்றும் மாற்று சிகிச்சையில் கவனம் செலுத்தி வருவதாக லாவ் அகர்வால் கூறியுள்ளார். மேலும் நாட்டில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் – உயிரிழந்தோர் விகிதம் 80 : 20 ஆக உள்ளது.
பல நாடுகளில் ஒப்பிடும் போது இந்தியாவில் உயிரிழந்தவர்களை விட குணமடைந்தவர்கள் மிக அதிகம். மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியா மிக சிறப்பாக கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி வருகிறது என்றும் கொரோனா பரிசோதனை செய்ய மாநிலங்களுக்கு 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தகவல் அளித்துள்ளார். மேலும் இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களை எண்ணிக்கை குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.