Categories
மாநில செய்திகள்

திருமா, சித்தார்த் உட்பட 600 பேர் மீது வழக்குப் பதிவு..!!!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், நடிகர் சித்தார்த் உட்பட 54 அமைப்புகளைச் சேர்ந்த 600 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாணவ அமைப்பினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன், இந்திய தவ்ஹீத் கூட்டமைப்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 54 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், நடிகர் சித்தார்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறையை எச்சரித்தும் அனுமதியின்றி, போராட்டத்தில் ஈடுபட்டதால் முகமது கவுஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் நடிகர் சித்தார்த் உட்பட 600 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 54 அமைப்புகளைச் சேர்ந்த 600 பேர் மீது 143 மற்றும் 41 பிரிவு 6 ஆகிய இரண்டு பிரிவுகளில் நுங்கம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதே போன்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து சாஸ்திரிபவன் மத்திய அலுவலகத்தை முற்றுகையிட முயன்று சாலை மறியலில் ஈடுபட்ட பெரியார் மாணவர் கழகத்தைச் சேர்ந்த 37 பேர் மீது 151, 143, 341, 41 பிரிவு 6 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |