Categories
உலக செய்திகள்

தொடரும் குற்றச்சாட்டு… சீனாவில், 99,000 பேர் கைது…!!

சீனாவில் தொலைதொடர்பு குற்றங்களில் ஈடுபட்ட குற்றஞ்சாட்டின் பேரில் 99 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவில் தொலைதொடர்பு குற்றங்களில் ஈடுபட்டனர் என்ற குற்றஞ்சாட்டின் பேரில் 99 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அந்நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சீனாவில் தொலைதொடர்பு குற்றங்கள் பெருமளவு அதிகரித்திருப்பதாக புகார்கள் வந்ததன் அடிப்படையில், மேக வாள் (கிளவுட் ஸ்வாடு) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

Image result for China captured 99,000 telecom fraud suspects in campaign

இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 18 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டன. அந்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து கடந்த ஜூன் மாதத்திலிருந்து இதுவரை 99 ஆயிரம் பேரை கைது செய்துள்ளனர். சீனாவில் தொலைதொடர்பு குற்றங்கள் ஆண்டுதோறும் பெருமளவு அதிகரித்து வருகிறது.

Image result for Over 99 thousand people have been arrested in China over telecommunication charges.

அந்த வகையில் கடந்தாண்டு 62.7 சதவீதமாக இருந்த தொலைதொடர்பு குற்றங்கள் இந்தாண்டு 135.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. சீன அதிகாரிகள் தங்கள் நாட்டின் அதிகார எல்லைக்குட்பட்ட கம்போடியா, பிலிப்பைன்ஸ் மற்றும் லாவோஸ் உள்ளிட்ட 13 நாடுகளில் தலைமறைவாக இருந்த 2,553 பேரையும் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |