பனி மூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து குளிர்ந்த வானிலை நிலவுகிறது. இதனால் பகல் நேரத்தில் கூட வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் கடுமையான பனி மூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் பனிமூட்டம் குறைந்ததும் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி வைத்திருந்த ஓட்டுநர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் சாலையே தெரியவில்லை. எனவே வெள்ளை கோடுகள் வரைந்து, ஒளிரும் ஸ்டிக்கர்களை பொருத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.