Categories
மாநில செய்திகள்

“3% வாக்குகளை வைத்துக்கொண்டு ஓவர் பேச்சு”…. ஓரத்தில் நின்று கத்த வேண்டிய கூட்டம்…. சீமானை விளாசிய மாணிக்கம் தாகூர்….!!!!!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தியாகி மாயாண்டி தேவரின் கொடிக்கம்பம் நாட்டும் விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மத்திய அரசு ஏழை, எளிய மக்களுக்கு பணம் தருவதாக கூறி 7 1/2 கோடி பேருக்கு வங்கி கணக்கு தொடங்கியுள்ளது. இந்த கணக்கில் தற்போது 100 நாள் வேலை திட்டத்திற்கான சம்பளம் மற்றும் முதியோர் உதவி தொகை மட்டுமே செல்கிறது.

இதனால் குறைந்தபட்ச பணம் கூட வங்கி கணக்கில் இல்லை என்று அவர்களிடம் இருந்து பணத்தை பறிக்கும் செயல்களில் தான் வங்கிகள் ஈடுபட்டுள்ளது. இது ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயலாக இருப்பதால் நாடாளுமன்றத்தில் கண்டிப்பாக குரல் கொடுப்பேன். அதன்பிறகு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் அன்னை சோனியா காந்தியை பற்றி அவதூறாக பேசுகிறார். இதற்கு நான் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். வெறும் 3% வாக்குகளை மட்டும் வைத்துக் கொண்டே தமிழக குரளாக காட்டிக் கொண்டிருக்கிறார். அது ஓரத்தில் நின்று கூச்சலிடும் கூட்டம் மட்டும்தான். இந்த கூட்டமானது இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 7 பேர் விடுதலை என்பது சட்டவிரோதமானது என்பதால், அதை ஏற்பவர்கள் யாராக இருந்தாலும், கண்டிப்பாக அவர்களுக்கு மரியாதை குறையும். பாஜக கட்சியில் தற்போது அனைத்து மோசடி பேர்வழிகள் மற்றும் ரவுடிகள் இணைந்துள்ளனர். தமிழக மக்கள் மத்தியில் பாஜகவுக்கு எப்போதுமே இடம் கிடையாது. தமிழகத்தில் கண்டிப்பாக தாமரை மலராது. மேலும் தொடர் விலை உயர்வுகளின் காரணமாக பாஜக மீது மக்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில், குஜராத் தேர்தலில் கண்டிப்பாக காங்கிரஸ் கட்சி தான் வெற்றி பெறும் என்று கூறினார்.

Categories

Tech |