Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி.. 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, குமரி, நெல்லை ஆகிய 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நேற்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழகத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருந்தது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மேற்குத் தொடர்ச்சி மலை, டெல்டா பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சிவகாசி- 12, ஸ்ரீவில்லிப்புத்தூர்- 9 செ.மீ, நன்னிலம்- 7 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இன்று வெளியான தகவலின் படி, 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |