தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் குறைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது . பின்னர் கடந்த சில வாரம் குறைய தொடங்கிய தங்கத்தின் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்ததோடு 2020_ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மேலும் உயர்ந்தது.கடந்த 6 நாட்களில் ரூ 1,288 வரை உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று காலை அதிரடியாக குறைந்தது.
1 பவுன் ஆபரன தங்கம் ரூ 424-யும் , கிராமிற்கு ரூ 53_யும் குறைந்த நிலையில் இன்று மாலை மீண்டும் குறைந்தது. நேற்றைய விலையோடு ஒப்பிடுகையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 33 ரூபாயும், சவரனுக்கு 264 ரூபாய்யும் குறைந்து பொதுமக்களை நிம்மதியடைய வைத்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ ரூ 30904-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 3863 _க்கு விற்பனை செய்யப்படுகின்றது. தங்கம் விலை குறைந்ததை போல வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் குறைந்து ரூபாய் 51.20-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.