Categories
தேசிய செய்திகள்

வெளிநாடு வாழ் இந்தியர்களால் இந்தியா முதலிடம்… எதற்கு தெரியுமா…?

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கடந்த 2020ம் ஆண்டு மட்டும் 6.13 லட்சம் கோடியை தாய்நாட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

வெளிநாடுகளில் தங்கி பணிபுரிபவர்கள் அங்கு சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் உள்ள குடும்பத்தாருக்கு அனுப்பிய தொகையை குறித்து உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2020இல் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் இந்தியாவிற்கு 6.13 கோடியை அனுப்பி உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் 2019 ஆண்டு 6.24 கோடி ரூபாயை அனுப்பியுள்ளனர்.

இது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இது 0.2 சதவீதம் குறைவு ஆகும். இதைதொடர்ந்து உலக அளவில் தாய் நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியா முதல் இடத்தை வகிக்கின்றது. இதைத்தொடர்ந்து சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் அனுப்பிய பணம் முதலிடத்திலும், அதைத்தொடர்ந்து துபாய் சவுதி அரேபியா அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளது.

Categories

Tech |