முறையான திட்டமிடுதல் இல்லாத முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் வெற்றியை தராது என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே எஸ் அழகிரி கூறியிருக்கிறார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக 3 நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்தும் வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழகதலைவர் கேஸ் அழகிரி இது குறித்து பேசுகையில்,
வெளிநாட்டு பயணம் செல்லும் பொழுது பொறுப்புகளை வேறு ஒருவரிடம் ஒப்படைத்து சொல்லும் மரபை எடப்பாடி பழனிச்சாமி மீது இருப்பதாக அவர் கூறினார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளதாக கூறியுள்ள முதலமைச்சர் அதற்கு என்ன திட்டங்களை வைத்திருக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அந்நிய நாட்டிலிருந்து மூலதனம் வழங்குபவர்கள் மின்சாரம் கேட்பார்கள், தண்ணீர் கேட்பார்கள், கட்டுமானத்திற்கு மணல்,ஜல்லி கேட்பார்கள், ரயில்வே திட்டங்களை தமிழ்நாட்டில் நிறைவேறாமல் இருப்பதற்கு காரணம் அரசாங்கம் மணல் ஜல்லி கொடுக்காதது தான். ஏனென்றால் குவாரிகள் முழுவதும் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள முதலீட்டாளர்களுக்கு வசதிகளை செய்து தர அரசு முன்வரததால் அவர்கள் இரண்டாவது ஆலைகளை நிறுவ மறுத்துள்ளதாக என்றும் கே எஸ் அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.