தமிழ் சினிமாவில் ஜீவா நடித்த முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவிடம் நடித்த வரும் நிலையில் தமிழில் விஜயுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே மும்பையில் தற்போது புதிதாக சொந்த வீடு வாங்கியுள்ளார். இந்த மகிழ்ச்சி தருணத்தை நடிகை பூஜா ஹெக்டே பகிர்ந்துள்ளார். எனக்கு சிறு வயது முதலே சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு இருந்தது.
அந்த கனவு தற்போது தான் நிறைவேறியுள்ளது. நான் மும்பையில் புது வீடு வாங்கி அந்த வீட்டை எனக்கு ஏற்றார் போல் மாற்றி உள்ளேன். என் வீட்டின் படுக்கையறை, ஹால், கிச்சன் என அனைத்தையும் என் விருப்பத்தின் படி டிசைன் செய்துள்ளேன். வெளியில் எவ்வளவு கஷ்டங்கள், மனபாரங்கள் இருந்தாலும் வீட்டிற்கு வந்தவுடன் அது எல்லாம் மறந்து போய்விடும். நான் நடிகை என்பதால் என்னுடைய படுக்கை அறையில் சினிமா ப்ரொஜெக்டர்களை பிரத்தியேகமாக வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை பூஜா சொந்த வீடு வாங்கியதற்காக ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.