லாரி செட் அதிபரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லம்பட்டி பகுதியில் பால்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில்வே பீடர் ரோட்டில் லாரி செட் வைத்துள்ளார். கடந்த அக்டோபர் 1 – ஆம் தேதியன்று பால்பாண்டி வேலையை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் பால்பாண்டியன் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பால்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பால்பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
அதன் பிறகு பால்பாண்டியிடம் வேலை பார்த்த மணிகண்டன் மற்றும் சூசைமனுவேல் இருவரையும் காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனை அடுத்து பால்பாண்டி தங்களை வேலையை விட்டு நீக்கியதால் இருவரும் சேர்ந்து அவரை அரிவாளால் சரமாரியாக தாக்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.