Categories
தேசிய செய்திகள்

மோசமான நிலையில் நண்பரின் உயிர்…. 1400 கி.மீ ஆக்சிஜனுடன் சிலிண்டருடன் காரில் பறந்த ஆசிரியர்…. இறுதியில் நேர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம்….!!

நண்பரின் உயிரை காப்பாற்றுவதற்காக ஆசிரியர் ஒருவர் 1400 கிலோமீட்டர் கடந்த ஆக்சிஜன் சிலிண்டரை கொண்டு வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் பகோரா மாவட்டத்தில் தேவேந்திர என்ற ஆசிரியர் வசித்து வருகிறார். இவருடைய நண்பர் ரஞ்சன் அகர்வால் என்பவர் டெல்லியில் உள்ள நொய்டாவில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திடீரென்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் ஆக்சிஜன் கிடைக்காததால் அவருடைய உடல்நிலை திடீரென்று மோசமானது. அதனால் அவருடைய குடும்பத்தினர் தேவேந்திராவை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து தேவேந்திரா பகோரா நகரில் ஆக்சிஜன் சிலிண்டருக்காக பல வழிகளில் முயற்சித்துள்ளார். ஆனால் எங்கேயும் கிடைக்கவில்லை. கடைசியாக ரூபாய் 10400 பெற்றுக்கொண்ட ஆக்சிஜன் சிலிண்டரை ஒருவர் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து அந்த ஆக்சிஜன் சிலிண்டரை அவர் தனது காரில் ஏற்றிக்கொண்டு பகோராவில் இருந்து பீகார், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களை கடந்து சுமார் 1400 கிலோ மீட்டர் பயணம் செய்து டெல்லிக்கு டெல்லியிலுள்ள நொய்டாவிற்கு வந்து சேர்ந்துள்ளார். அதன்பின் அவர் தனது நண்பருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கொடுத்த பின்பு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது அவர் குணமடைந்து வருகிறார். அவரின் உடல் முழுமையாக நலம் பெற்ற பின்னரே தான் டெல்லியிலிருந்து பகோராவிற்கு செல்லப் போவதாக தேவேந்திரா கூறியுள்ளார்.

Categories

Tech |