Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் தட்டுப்பாடு…. மனு தாக்கல் செய்த மருத்துவமனை…. தூக்கில் போடுவதாக நீதிபதிகள் எச்சரிக்கை….!!

ஆக்சிஜன் சப்ளை தடுப்பவர்கள் குறித்து ஒரு சம்பவத்தை உதாரணமாக அரசு காட்டினால் அவர்களை தூக்கில் போடுவோம் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகின்றது. இதனால் பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடும் டெல்லியில் பல மருத்துவமனைகளில் ஆச்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் இறக்க நேரிடுகிறது.

அதனால் ஏற்கனவே டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு அமர்வுக்கு வந்த இந்த வழக்கில் “பிச்சை எடுங்கள், திருடுங்கள், கடன் வாங்கியாவது மக்களுக்கு ஆக்சிஜனை கொண்டுவந்து கொடுங்கள். மக்களின் உயிர் மிகவும் முக்கியம்” எனக் நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள மகாராஜா அகர்சென் மருத்துவமனையில் 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆக்சிஜன் இன்றி தவித்து வருகின்றனர்.

அதனால் அந்த மருத்துவமனை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்ததுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆக்சிஜன் சப்ளை தடுக்கும் மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி நிர்வாகங்கள், அதிகாரிகள் யாரையும் விட்டு வைக்க மாட்டோம் என எச்சரித்துள்ளனர். மேலும் ஆக்சிஜன் சப்ளையை தடுப்பவர்கள் குறித்து ஒரு சம்பவத்தை டெல்லி அரசு எங்களிடம் உதாரணமாக காட்டினால் போதும். அந்த அதிகாரிகளை தூக்கில் போடுவோம் என கடுமையாக எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |