ஈராக் மருத்துவமனையில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தினால் கொ ரோனா நோயாளிகள் 82 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈராக் தலைநகர் பாக்தாத் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் திடீரென்று நேற்று ஆக்சிஐன் சிலிண்டர் எதிர்பாராத விதமாக வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டது.
மேலும் அந்த தீ வேகமாக மருத்துவமனை முழுவதும் பரவி கொரோனா நோயாளிகள் தங்கியிருந்த பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த எதிர்பாராத தீ விபத்தில் 82 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் 112 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து குறித்து ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதீமி விபத்துக்கு காரணமானவர்களை தக்க தண்டனை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள அதிகாரிகளையும் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் அவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கூறியிருக்கிறார்.