Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த நோயாளிகள் குடும்பத்திற்கு…. ரூ.5 லட்சம் இழப்பீடு… டெல்லி அரசு அதிரடி..!!

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்தினருக்கு ரூ 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி பல மாநிலங்களில் படுக்கை வசதி, தடுப்பூசி, ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்த நோயாளிகளின் குடும்பங்களுக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 50 ஆயிரம் இழப்பீடு தொகையை வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |