Categories
தேசிய செய்திகள்

22 நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாததால் உயிரிழப்பு…. சோகம்..!!

டேங்கர்களில் ஆக்சிஜன் நிரப்பி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஒரு டேங்கரில் இருந்து பலத்த சத்தத்துடன் ஆக்சிஜன் வெளியேறியதால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு நிலவியது.

உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலால் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. இதனின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான அளவு ஆக்சிஜன் இல்லாததால் அதன் தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதனால் மருத்துவமனைகளில் உள்ள டேங்கரில் ஆக்சிஜன் நிரப்பப்பட்டு வந்தது. அந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நாசிக்கில் உள்ள டாக்டர் ஜாகிர் உசேன் மருத்துவமனைகளில் இன்று ஆக்சிஜன் திடீரென கசிவு ஏற்பட்டுள்ளது. டேங்கர்களில் ஆக்சிஜன் நிரப்பிக் கொண்டிருந்த போது ஒரு டேங்கரில் இருந்து பலத்த சத்தத்துடன் ஆக்சிஜன் வெளியேறியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

அதன்பின் தகவலறிந்த அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாயுக் கசிவை கட்டுப்படுத்த முயற்சி செய்துள்ளனர். இந்த விபத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் மருத்துவமனைக்கான ஆக்சிஜன் சப்ளை தடை பட்டுள்ளதால், 22 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சுகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மந்திரி ராஜேந்திர ஷிக்னே அவர்கள் கூறியுள்ளார்.

Categories

Tech |