திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு 36,00,000 மதிப்பீட்டில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை முன்னாள் மாணவர்கள் வழங்கியுள்ளனர்.
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பல மாவட்டங்களிலிருந்து வந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களுக்கு தேவைப்படுகின்ற ஆக்சிஜன் மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவி தேவையான அளவு இல்லை என்கின்ற குறைபாடு இருந்துக்கொண்டே வந்தது.
இந்நிலையில் அரசு மருத்துவமனையில் படித்த முன்னாள் மாணவர்கள், 10 லிட்டர் அளவிலான ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி ஐந்தும், 5 லிட்டர் அளவிலான ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவி 5 என்று மொத்தமாக 36,00,000 மதிப்பீட்டில் வழங்கியுள்ளனர். இதனை மருத்துவமனையினுடைய டீன் டாக்டரான ரவிச்சந்திரனிடம் அளித்துள்ளார்கள்.