Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அமைச்சர்களின் முன்னிலையில்… வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள்… ஈஷா அறக்கட்டளையின் உதவி…!!

அமைச்சர்கள் முன்னிலையில் ஈஷா அறக்கட்டளையின் சார்பாக 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள் தமிழக அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.

ஈஷா அறக்கட்டளையின் சார்பில் முதற்கட்டமாக பி.பி.இ கிட்கள், முக கவசங்கள் மற்றும் 500 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் போன்றவை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் வசதிக்காக தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா  தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்வதற்கு ஏதுவாக இரண்டு வாகனங்களும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசிடம் மேற்கூறிய நிவாரண பொருட்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் பிற அதிகாரிகளின் முன்னிலையில் வழங்கப்பட்டுள்ளது. இதில் கோவை அரசு மருத்துவமனைக்கு மட்டும் 500 முக கவசங்கள் மற்றும் 500 பி.பி.இ கிட்கள் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |