சரோஜ் மற்றும் கங்காராம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 200க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளும் ஆக்சிஜன் வசதியும் இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள சரோஜ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 100க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு திடீரென்று ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அதனால் மருத்துவமனைகளில் இருந்து ஆக்ஸிஜன் தயாரிக்கும் நிறுவனத்திற்கும் அரசுக்கும் தொலைபேசியில் மருத்துவர்கள் தொடர்பு கொண்டு கடைசி நிமிஷத்தில் ஆக்ஸிஜன் நிரம்பிய கண்டைனர் ஒன்று மருத்துவமனையின் வாசலில் வந்து நின்றது. அதனைக் கண்டதும் நோயாளிகளின் குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
ஆனால் வாசல் வரைக்கும் வந்த ஆக்சிஜன் கண்டெய்னரால் மருத்துவமனைக்குள் வர இயலவில்லை. இதன் காரணம் அதனுடைய சிறிய கதவு தான். அதனால் மருத்துவமனை நிர்வாகம் ஜேசிபி எந்திரத்தை உடனடியாக வரவழைத்து மருத்துவமனையின் சுற்றுச் சுவரை உடைத்தபின் லாரியை உள்ளே வரவழைத்து ஆக்சிஜனை உடனடியாக நிரப்பி நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியது. இதேபோல் கங்காராம் மருத்துவமனையிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 130 நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. ஆனால் சிறிய நேரத்தில் ஆக்சிஜன் வரவழைக்கப்பட்டதால் நோயாளிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டது.