Categories
உலக செய்திகள்

வெடித்த ஆக்சிஜன் சிலிண்டர்…. பலியான நோயாளிகள்…. கைதான மருத்துவமனை டீன்…!!

மருத்துவமனையில் உள்ள கொரோனா அறையில் இருக்கும் ஆக்சிஜன் தொட்டி வெடித்து சிதறியதில் 54 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் நாட்டின் தெற்கு மாகாணத்தில் உள்ள தி குவாரல் நசிரியா என்ற பகுதியில் இமாம் ஹுசைன் என்ற மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களுக்காக  தனியாக சிகிச்சை அளிக்கும் அறை ஒன்று உள்ளது. இந்த அறையில் இருந்த ஆக்சிஜன் தொட்டி ஒன்று திடீரென வெடித்தது. இதனை அறிந்த தீயணைப்பு குழு மருத்துவமனைக்கு விரைந்து வந்து தீயை அணைத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் சிக்கிய கொரோனா நோயாளிகளில் 54 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 67 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும்  விபத்தில் சிக்கியவர்களில் சில பேர் இறந்திருக்கக் கூடும் என்பதால் பலி எண்ணிக்கை அதிகமாகும் என்றும்  ஈராக் நாட்டின் சுகாதார துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த  சம்பவத்திற்கு காரணமான மருத்துவமனை முதல்வரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |