Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க வேண்டும்…. கோரிக்கை விடுத்த எம்.பி…. தமிழக முதலமைச்சருடன் நேரில் சந்திப்பு….!!

நெல்லை மற்றும் கூடங்குளம் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்திக்கான நிலையத்தை அமைக்க வேண்டுமென்று ஞானதிரவியம் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுடைய தேவையை பூர்த்தி செய்யும் விதமாக நெல்லை அரசு மருத்துவமனையிலும், கூடங்குளம் அரசு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் உற்பத்திக்கான நிலையத்தை அமைக்க வேண்டுமென்று மத்திய சுகாதாரத் துறையினுடைய மந்திரியான ஹர்ஷவர்த்தனுக்கும், சுகாதாரத் துறையினுடைய இணை செயலாளரான நிபுன் விநாயக் என்பவருக்கும் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினரான ஞானதிரவியம் கோரிக்கை கடிதத்தை எழுதியுள்ளார்.

மேலும் இவர் தமிழக முதலமைச்சரான மு.க.ஸ்டாலினையும் நேரில் சந்தித்து நெல்லை மாவட்ட மக்களினுடைய சார்பாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைப்பது குறித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |