ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 13 பவுன் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கரைசுத்துபுதூர் பகுதியில் ஐசக் தனராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஓய்வு பெற்ற ஆசிரியையான லீலா வசந்தகுமாரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் லீலா வசந்தகுமாரி கரைசுத்துபுதூர் பகுதியிலிருந்து சொக்கலிங்கபுரம் செல்லும் சாலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் லீலா வசந்தகுமாரியின் கழுத்தில் கிடந்த 13 பவுன் தங்கச்சங்கிலியை கட்டிங் பிளேடால் அறுத்து பறித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து லீலா வசந்தகுமாரி உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.