இந்தியாவில் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்பட்டு வருகிறது. இவற்றை ஓய்வு பெற்ற ஊழியர்கள் தொடர்ந்து பெறுவதற்கு வாழ்நாள் சான்றிதழ் ஆண்டிற்கு ஒருமுறை வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். தற்போது வாழ்நாள் சான்றிதழ் டிஜிட்டல் முறையிலும் சமர்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் மாதம் இறுதிக்குள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை ஓய்வூதியம் பெறுவோர் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்நிலையில் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை குறித்த விழிப்புணர்வு முகாம்களை மத்திய அரசு நாடு முழுவதும் ஏற்பாடு செய்து வருகின்றது. அதன்படி நேற்று மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையில் ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் வாழ்நாள் சான்றிதழ் குறித்து ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.