முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தால் பூமிக்கு தான் பாரம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
தமிழக அரசை மத்திய அரசு கலைத்தால் கூட அதிமுக அதை ஏற்றுக் கொள்ளும் என்று சிதம்பரம் கூறியிருப்பது பற்றிய கேள்விக்கு முதல் அமைச்சர் இவ்வாறு கூறினார். மேட்டூரில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், அவர் எத்தனை ஆண்டு காலம் மத்திய அமைச்சராக இருந்தார். அவரால் எத்தனை திட்டம் செயல்படுத்தப்பட்டது. நிதியமைச்சர் ஆக இருந்த போது தேவையான நிதி கொடுத்தாரா ? அவரால் இந்த நாட்டுக்கு என்ன பயன் , பூமிக்கு தான் பாரம் என்று விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் , புதிய தொழிற்சாலை அமைக்க புதிய திட்டத்தை கொண்டு வந்தாரா. காவிரி நதிநீர் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சனை , பாலாறு பிரச்சனை என்று எந்த பிரச்சினை இவர் தீர்த்தார்.அவருக்கு சுயநலம் தான் முக்கியம், நாட்டுநலன் கிடையாது. எனவே அவரின் பேச்சை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. மக்கள் எல்லாம் அவர்களை நிராகரித்து விட்டனர் .அவர்களுக்கு அதிகாரம் தேவை இப்படி பேசுகின்றார் என்று முதல்வர் தெரிவித்தார்.