Categories
பேட்மிண்டன் விளையாட்டு

அய்யோ போச்சு… தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்… காலிறுதியில் வெளியேறிய இந்தியா… சோகத்தில் ரசிகர்கள்..!!

பாங்காங்கில் நடைபெறும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடரில் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றில்  இந்தியாவின் பிவி சிந்து மற்றும் சமீர் வெர்மா ஆகிய இருவரும் தோல்வி அடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

பாங்காங்கில் இந்த ஆண்டிற்கான தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் வீராங்கனை பிவி சிந்து தாய்லாந்தின் ராட்சனோக் இன்டனாவுக்கு எதிராக விளையாடினார். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கத்திலிருந்தே அபாரமாக விளையாடிய  ராட்சனோக் 21 – 13, 21 – 9 என்ற கணக்கில் இந்தியாவின் பிவி சிந்துவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

நேற்று இதே போல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சமீர் வெர்மா டென்மார்க்கின் ஆண்டர்ஸ் அன்டன்சனை எதிர்கொண்டார். இந்த போட்டியின் முதல் செட் ஆட்டத்தில்  ஆண்டர்ஸ் அன்டன்சன் 21 – 13 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டாவது செட் ஆட்டத்தில் 21 – 19 என்ற கணக்கில் சமீர் வெர்மா வெற்றி பெற்றார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட் ஆட்டத்தில் ஆண்டர்ஸ் அன்டன்சன்  22 – 20 என்ற கணக்கில்  இந்தியாவின் சமீர் வர்மாவை வீழ்த்தி வெற்றார். இதன்மூலம் டென்மார்க்கின் அன்டன்சன்  21- 13, 19- 21, 22- 20 என்ற கணக்கில் இந்தியாவின் சமீர் வெர்மாவை  வீழ்த்தி போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதனால் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் காலிறுதிப் போட்டியில் இருந்து இந்தியாவின்       பிவி சிந்து மற்றும் சமீர் வெர்மா ஆகிய இருவரும் வெளியேறி உள்ளனர்.

Categories

Tech |