Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தல அஜித் படத்திற்கு பாடல் எழுதும் பா.விஜய்..!!!

அஜித்துடைய “நேர் கொண்ட பார்வை” படத்திற்கு பாடல் எழுதுவதற்கு பா.விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

அஜித்துடைய  “நேர்கொண்ட பார்வை” திரைப்படத்திற்கு பாடல் எழுதுவதற்கு பாடலாசிரியர் பா. விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகும் இந்த படத்தில் நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆதிக் ரவிச்சந்திரன், ஆண்ட்ரியா தாரங்  மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Related image

மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு பாடல் எழுதுவதற்கு பாடலாசிரியர்  பா.விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பில்லா, ஏகன் போன்ற அஜித் படங்களுக்கு பாடல் எழுதியுள்ள பா.விஜய் கடைசியாக ஆரம்பம் படத்திற்கு பாடல் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |