Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு!… “பாக்கி பணத்தை தா”…. தொழிலாளியை லாரி மீது தள்ளிவிட்ட நபர்…. நொடியில் பறிபோன உயிர்….!!!!

தெலங்கானா ஹைதராபாத்திலுள்ள பாலா நகர் நர்சாபூர் குறுக்கு சாலையில் ஸ்ரீனிவாஸ் (35) என்பவர் வசித்து வந்தார். இவர் சென்ற 2 நாட்களுக்கு முன் காசிராம் மற்றும் பிற தொழிலாளர்களுடன் கட்டிட வேலை செய்துள்ளார். இதற்காக ரூபாய்.1,200 சம்பளமாக பேசப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் காசிராம் என்பவருக்கு ஸ்ரீனிவாஸ் ரூபாய்.800 மட்டுமே ஊதியமாக வழங்கியுள்ளார். இதன் காரணமாக நர்சாபூர் நடைபாதையில் வைத்து ஸ்ரீனிவாஸ் மற்றும் காசிராம் இடையில் மீதமுள்ள 400 ரூபாய்காக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதை பார்த்த அப்பகுதியினர் அவர்களை சமாதானப்படுத்தி இருக்கின்றனர். எனினும் கோபமடைந்த காசிராம், காலை 10 மணியளவில் ஸ்ரீனிவாஸை சாலையில் வந்த லாரி மீது தள்ளிவிட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த ஸ்ரீனிவாஸ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |