Categories
உலக செய்திகள்

காஷ்மீர் தேர்தலில் வெற்றி பெற்ற இம்ரான்கான்…. கருத்து தெரிவித்த இந்தியா…. கண்டனத்தை பதிவு செய்த பாகிஸ்தான்….!!

பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் அந்நாட்டு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றது தொடர்பில் கருத்து தெரிவித்த இந்தியாவிற்கு பாகிஸ்தான் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் வெற்றி பெற்றுள்ளார். இவ்வாறு நடந்த தேர்தலுக்கு இந்தியா தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளது. அதாவது இந்தியாவின் வெளியுறவு துறையின் செய்தித் தொடர்பாளர் இதுதொடர்பான கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்தியாவிடமிருந்து பாகிஸ்தான் காஷ்மீரை சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததை மறைப்பதற்கான முயற்சி இந்த தேர்தல் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இந்தக் கருத்துக்கு இந்திய தூதரக அதிகாரியை நேரில் அழைத்த பாகிஸ்தான் தன்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் நாட்டின் உறுதியான தெளிவான முடிவு குறித்தும் அவரிடம் பாகிஸ்தான் பேசியுள்ளது.

Categories

Tech |