இந்தியா தங்கள் நாட்டின் ஒரு அங்கமாக கில்ஜித்-பல்டிஸ்தானை கூறிவரும் நிலையில், பாகிஸ்தான் அப்பகுதியை தங்களுடைய நாட்டின் ஒரு மாவட்டமாக அங்கீகரித்து அதற்கான சட்ட மசோதாவையும் இயற்றியுள்ளது.
இந்தியா ஜம்மு காஷ்மீர், கில்ஜித்-பல்டிஸ்தான் மற்றும் லடாக் பகுதி போன்றவற்றை தங்களுடைய நாட்டின் ஒரு அங்கம் என்று கூறி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பிலுள்ள கில்ஜித்-பல்டிஸ்தானை அந்நாட்டின் ஒரு மாவட்டமாக அங்கீகரிக்கும் வகையிலான “26 வது சட்ட திருத்த மசோதா” என்று பெயரிடப்பட்டுள்ள மசோதா பாகிஸ்தான் நாட்டில் இயற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு இயற்றப்பட்ட இந்த மசோதா பாகிஸ்தான் நாட்டின் காஷ்மீர் மீதான நோக்கங்களை பாதிக்காத வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த மசோதா ஐ.நாவினுடைய பலவிதமான முக்கிய தீர்மானங்களை பரிசோதித்த பிறகே இயற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் நாட்டின் நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இந்த மசோதாவில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கில்ஜித்-பல்டிஸ்தான் மாவட்டத்திற்கு பிரதிநிதித்துவம் அளிப்பது தொடர்பான விவகாரமும் இடம் பெற்றுள்ளது.