பாகிஸ்தான் தனி நாடாக வேண்டும் என்று வலியுறுத்திய ஜின்னாவின் சொத்துக்களை மீட்க பாகிஸ்தான் நாட்டின் நீதிமன்றம் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு பின்பு தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தான் தனிநாடாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று அலி ஜின்னா என்பவர் வலியுறுத்தியுள்ளார். அவரது விருப்பப்படியே பாகிஸ்தான் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டதையடுத்து கடந்த 1948 ஆம் ஆண்டு ஜின்னா மரணமடைந்துள்ளார்.
இவருடைய உறவினர்கள் அவரது சொத்துக்களை நீக்கக்கோரி கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன்பு பாகிஸ்தான் நாட்டிலுள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இந்த வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் நாட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது ஜின்னாவின் சொத்துக்களை மீட்க ஒரு நபர் விசாரணை ஆணையம் பாகிஸ்தான் நீதிமன்றம் அமைத்துள்ளது.