Categories
Uncategorized தர்மபுரி மாவட்ட செய்திகள்

பால் கொள்முதல் நிறுத்தப்பட்டால் உற்பத்தியாளர்கள் போராட்டம்..!!

ஆவின் நிர்வாகம் பால் கொள்முதலை நிறுத்தியதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பால் விவசாயிகள் பாலைக் கீழே ஊற்றியும் ஆவின் அலுவலகத்திற்கு பூட்டு போட்டும் போராட்டம் நடத்தினர்.

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் உள்ள சின்ன கவுண்டம்பட்டி பொம்பட்டியில் 150 பால் விவசாயிகள் உள்ளனர். தங்களது பகுதியில் உற்பத்தி செய்யும் பாலை கூட்டுறவு நிர்வாகம் மூலம் விற்பனை செய்து வந்தனர். கடந்த இரு தினங்களாக எந்த அறிவிப்பும் இன்றி திடீரென பால் கொள்முதலை ஆவின் நிர்வாகம் நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. பால் உற்பத்தி அதிகரித்து இருப்பதால் பால் கொள்முதல் செய்ய முடியாது என்று நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.

இதனை கண்டித்து நேற்று மொரப்பூர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கேன்களில் கொண்டு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட லிட்டர் பாலை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் நான்கு ரோடு அருகே உள்ள தர்மபுரி மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தையும், பால் குளிரூட்டும் நிலையத்தையும் பூட்டு போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Categories

Tech |