லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கொல்லம்பாளையம் முல்லை நகர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு தேவ பிரசாந்த் என்ற மகன் இருந்தார். இதில் சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிகிறது. இவருடைய மகன் தேவ பிரசாந்த் ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில் தனது அத்தை வீட்டிற்கு பால் வாங்குவதற்காக தேவ பிரசாந்த் சென்றார். இதனையடுத்து தேவ பிரசாந்த் பால் வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அலுச்சாம்பாளையம் பகுதியில் தேவ பிரசாந்த் சென்றபோது எதிரில் வந்த ஒரு லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் தேவ பிரசாந்த் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்தார். அதன்பின் அக்கம்பக்கத்தினர் தேவ பிரசாந்தை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தேவ பிரசாந்த்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.