வெண்மையை போல் மாசு படாத பாலையும் மாசு படுத்தினரா நம் மக்கள்…..
பச்சிளங்குழந்தை முதல் வயது முதிர்ந்தவர் வரை உடலில் பலம் வேண்டும் என்று அருந்துவது பால். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் நாம் அருந்துவது பாலா இல்லை விஷமா என்று தெரியாத அளவிற்கு பாலில் ஏகப்பட்ட உயிர்கொல்லிகள் உருவாக மாட்டின் மடியில் இருக்கும் பொழுதே அதனை விஷமாக மாற்றுகின்றனர்.
மாடு அதிகம் பால் தரவேண்டும் என்ற ஆசையில் bovine growth R1 என்னும் ஒரு ஊசி போடுறாங்க அந்த ஊசி போட்டால் குறைந்தது 2 லிட்டர் பால் கொடுக்கும் மாடு 20 லிட்டர் பால் கொடுக்கும் கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகமான பால் தரதுக்காக இந்த ஊசியை மாடுகளுக்குப் போடுகிறார்கள் இது அந்த மாட்டுக்கு மட்டுமில்லாம அந்த மாடு கொடுக்கக்கூடிய பாலுக்கும் கெடுதல் விளைவிக்கக் கூடியது.
அந்த பால நம்ம குடிக்கிறோம் என்றால் நம் உடலுக்குள் போவது பாலா இல்லை வேற என்ன? அப்படின்னு கேள்வி எல்லாருக்கும் தோன்றும் இப்பொழுது நாம் குடிப்பது பாலே கிடையாது. வெள்ளைய இருக்க வேண்டும் என்பதற்காகவும் கட்டியாக இருப்பதற்காகவும் பல பொடிகளை கலக்கின்றனர்.
தினமும் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அவர்களுடய முப்பது நாற்பது வயதில் டையபடிக் வருவதற்கான அபாயமும் இருக்கு என்று ஆய்வாளர்கள் சொல்றாங்க. பால் நாம் அன்றாட எடுத்துக்க வேண்டிய பொருள் கிடையாது இதே மருத்துவர்கள் நீங்கள் 10 நாள் பால் குடிக்கவேண்டும் என்று சொன்னால் அந்த நாட்கள் மட்டும் குடித்தால் போதுமானது.
அது ஒன்றில் இருந்து மட்டும் உங்களுக்கு ஊட்டச்சத்து வரப்போவதில்லை. அதனால அவசியத்துக்கு மட்டும் பயன்படுத்தலாமே தவிர, தினமும் குடிக்கணும்னு அவசியம் கிடையாது என்று பல டாக்டர்கள் சொல்றாங்க.