Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் கொலை: தமிழ்நாடு முழுவதும் சலூன் கடைகள் அடைப்பு போராட்டம்…!!

திண்டுக்கல்லில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 12 வயது சிறுமியின் வழக்கில் நீதி வழங்க வலியுறுத்தி நேற்று திண்டுக்கல்லில் சலூன் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கடந்த 2019ஆம் ஆண்டு 12 வயது சிறுமி ஒருவரை, அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் கிருபாகரன் உள்ளிட்ட சிலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி சிறுமியின் உடலில் மின்சாரத்தை செலுத்தி கொடூரமான முறையில் கொலை செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் குற்றம் சரியாக நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி   கிருபாகரணை விடுதலை செய்தது.

இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சலூன் கடைகள் அடைக்கப்பட்டன.

35 சாட்சிகளிடம் விசாரணை நடத்தும் போலீசார் முறையாக ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என நீதிபதி கூறியுள்ளதால் சம்மந்தப்பட்ட போலீசார் மீது பொதுமக்கள் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. போராட்டங்களை அடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என சட்டம் மற்றும் நீதி மன்றங்கள் துறை அமைச்சர் திரு சிபி சண்முகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |