காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு அருகே பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் நீலப் பூங்காவில் நேற்று முன்தினம் இரவு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனியாக இருந்துள்ளார். கூலி வேலை பார்க்கும் அந்த பெண் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது நடக்க முடியாமல் சிரமப்பட்ட அவர், பூங்காவில் சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு பின்னர் வீட்டிற்கு செல்லலாம் என்று அமர்ந்துள்ளார்.
அப்போது பூங்காவிற்கு வந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை திடீரென்று கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். காவல்துறை தலைமை அலுவலகத்தின் அருகில் சுமார் 500 மீட்டர் தொலைவில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் காவல்துறை தலைமை அலுவலகத்தில் அருகே நடந்துள்ளதால் நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சந்தேகத்தின் பேரில் அப்பகுதியில் ஜவுளி கடை வைத்துள்ள 25 வயது வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.