கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெறும் தன் மீதான வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்திற்கு மாற்றக்கோரி மோசடி மன்னன் காசி தொடர்ந்த வழக்கை மற்ற வழக்குகலோடு சேர்ந்து பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இளம்பெண்களை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காசி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி பாலியல் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருவதாகவும், நாகர்கோயில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் தனக்கு ஆஜராக வழக்கறிஞர்கள் முன் வராததால் சட்ட உரிமை மறுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
வழக்குகளை வேறு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட கோரியும் அதுவரை நாகர்கோவில் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிப்பதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டுமென தெரிவித்து உள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொங்கிஅப்பன் காசியின் மற்ற வழக்குகலோடு சேர்த்து பட்டியலிடும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.