Categories
உலக செய்திகள்

பால்வெளி மண்டலத்தை…. சுற்றி வரும் சிறுகோள்…. வெளிவந்துள்ள சுவாரஸ்யமான தகவல்கள்….!!

பால்வெளி மண்டலத்தில் மர்மபொருள் ஒன்று சுற்றி வருவதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நமது பால்வெளி மண்டலத்தில் எண்ணிலடங்காத சிறு கோள்களும் வால்நட்சத்திரங்களும் சுற்றி வருகின்றன. மேலும் விண்ணில் நடக்கும் பல விஷயங்கள் மனித அறிவுக்கு எட்டாதவை ஆகும்.  அதிலும் பால்வெளியில் செவ்வாய் மற்றும் வியாழன் போன்ற சிறுகோள்கள் சுற்றி வரும் முக்கிய பகுதியில் அரிதான ஒரு மர்ம பொருள் உள்ளதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மர்ம பொருள் சிறுகோள் அல்லது வால் நட்சத்திரமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு கோவில்களில் இதுவும் ஒன்று.

ஆனால் இது ஒரு முறை மட்டுமே தனது இயக்கத்தில் இருந்துள்ளதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக செவ்வாய் மற்றும் வியாழன் பகுதியில் சுற்றி வரும் சிறுகோள்கள் தங்களின் உருவத்தை மாற்றிக் கொள்வது இல்லையாம். ஆனால் இது தூசியை உமிழ்ந்து கொண்டே பயணித்து வருவதாக கூறப்படுகிறது. அதிலும் Asteroid Terrestrial-Impact Last Alert System அளித்த தகவலின் படி, இந்த மர்ம பொருளானது கடந்த ஜூலை மாதத்தில் இயக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அண்மையில் நடைபெற்ற கிரக அமெரிக்கா வானியல் சங்க பிரிவின் 53வது பொதுக்கூட்டத்தில் ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அதில் அறிஞரான ஹென்ரி ஹ்சே கூறியதில் “இது ஒரு வால் நட்சத்திரமாக இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக இது 2005 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் இதற்கு 2005 QN173 என்று பெயரிட்டனர். இது 3.2 தடிமன் கொண்ட தூசிப்படலங்களால் சூழப்பட்டுள்ளது. அதிலும் சிறு கோள்களின் அனைத்து குணங்களையும் பெற்றுள்ளது. மேலும் கடந்த ஜூலை மாதம் நடந்த ஆய்வின் படி சிறுகோளின் வால்பகுதி நீளமானது 7.20 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கு மேலாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது பூமியிலிருந்து நிலவுக்கு இரண்டு முறை சென்று வரும் தூரமாகும். இது 1400 மீட்டர் அகலம் உடையது.

இது நகரும் போது அதன் வழித்தடத்தில் தூசியையும் பனிக்கட்டியையும் வெளியேற்றி வருவதாக கூறப்படுகிறது. எனவே இந்த சிறுகோளானது தனித்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் போது பூமியில் உயிரினங்கள் எவ்வாறு தோன்றின என்பது தொடர்பான தகவல்களும் வெளியாகும் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது வெளியிடும் பனிக்கட்டியானது இயக்கத்தின் போது ஆவியாகலாம் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |