ஆஸ்திரியாவிலுள்ள வீடு ஒன்றில் இரவு நேரத்தில் கழிவறைக்குள் நுழைந்த 6 அடி நீளமுடைய கொடிய விஷப் பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காட்டு பகுதிக்குள் பத்திரமாக விட்டுள்ளார்கள்.
ஆஸ்திரேலியாவிலுள்ள வீடு ஒன்றில் இரவு நேரத்தில் கழிவறையிலிருந்து தானாக தண்ணீர் வெளியேறும் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் கழிவறைக்கு சென்று பார்த்தபோது அங்கு 6 அடி நீளமுடைய கொடிய விஷப்பாம்பு ஒன்று இருந்துள்ளது.
இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் இது குறித்த தகவலை தீயணைப்பு வீரர்களுக்கு தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரமாகப் போராடி கொடிய விஷ பாம்பை பிடித்துள்ளார்கள். அதன்பின் தீயணைப்பு வீரர்கள் அந்த கொடிய விஷப் பாம்பை காட்டுப்பகுதிக்குள் பத்திரமாக விட்டுள்ளார்கள்.