Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தாயை காப்பாற்ற முயன்ற போது…. சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தாயை காப்பாற்ற முயன்ற சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குப்பனாபுரம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அர்ச்சனா என்ற மனைவி உள்ளார். இவர் வாய் பேச முடியாதவர். இந்த தம்பதியினருக்கு கார்த்திக் ராஜா, சுபாஷ் என்ற 2 மகன்கள் இருந்தனர். இந்நிலையில் அர்ச்சனா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டு சுவரின் அருகில் இருந்த சிறிய ஓட்டையில் நல்ல பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்த சிறுவன் கார்த்திக்ராஜா, பாம்பு தனது தாயை கடித்து விடக்கூடாது என்பதற்காக அதனை விரட்டினான்.

அப்போது பாம்பு கார்த்திக் ராஜாவை கடித்து விட்டதால் மயக்கமடைந்த சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு கடம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கார்த்திக் ராஜாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடம்பூர் காவல்துறையினர் சிறுவன் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |