மத்திய அரசு ஆதார் எண்களுடன் பொதுமக்களின் அனைத்து வகை அரசு ஆவணங்களையும், சான்றுகளையும் இணைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்குரிய பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக வருமான கணக்குகளை பராமரிக்கும் பான் கணக்கு எண்களை உடனே ஆதார் எண்களுடன் இணைக்க வேண்டும் என இதுவரையிலும் அரசு பல முறை கால அவகாசம் வழங்கி உள்ளது. இந்த நிலையில் 31/03/2023 ஆம் தேதி வரை தான் கடைசி வாய்ப்பு எனவும் அதன் பிறகும் இணைக்காதவர்களின் பான் கார்டு செயலிழந்து விடும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒருமுறை உங்களது பான் கார்டு செயலிழந்துவிட்டால், அந்த பயனாளரின் IT ரிட்டர்ன் தாக்கல் செய்யப்பட முடியாது. அத்துடன் IT பிரிவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவு மே 2017-ல் வெளியாகிய மத்திய நிதியமைச்சகத்தின் அறிவிப்பின் படி, ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம், மேகாலயா மற்றும் வருமான வரிச் சட்டம் 1961ன் கீழ் உள்ள நபர்களுக்கு இந்த நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.