Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை…!! சாலையோர பானிபூரி…. புற்றுநோய் ஏற்படும் அபாயம்…!!

பானிபூரி சாப்பிடுவதால் நமது  உடலில் ஏற்படும் ஆபத்து பற்றிய தொகுப்பு 

துரித உணவுகளில் பலரும் வாங்கும் வண்ணம் எளிதாக கிடைக்கக்கூடிய பொருள் பானிபூரி.  ஆனால் அவற்றில் இருக்கும் தீமைகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள நினைப்பதில்லை.

சுத்தமான எண்ணெயில் பானிபூரி பொறிக்கப்பட்டிருந்தால் அது நமது உடலுக்கு அத்தியாவசியமான கொழுப்பு சத்துக்களை கொடுப்பதோடு, உடனடி எனர்ஜியை  உடலில் ஏற்படுத்தும் புரதச் சத்துக்களும் அதில் அடங்கியுள்ளது. ஆனால் இதில் சேர்க்கப்படும் சோடியம் மற்றும் கெட்டி தயிர் உடல் எடையை அதிகரிக்கச் செய்து பல நோய்கள் வருவதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

பானிபூரி விற்பவர்களின் கைகளில் ஏதேனும் கிருமிகள் இருந்தால் அது நமக்குத் தெரியாமல் நமது உடலுக்குள் சென்று வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மைதா மாவு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒன்றாக இருக்கும்போது அதனை மேலும் மிருதுவாக மாற்ற அலொக்ஸான் எனும் கெமிக்கல் சேர்க்கப்படுவதால், அது கொண்டு தயார் செய்யப்படும் பானி பூரியை சாப்பிடுபவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்திய எண்ணெயில் பானி பூரியை பொரிப்பதால் அதனை சாப்பிடுபவர்கள் உடலில் கெட்ட கொழுப்பு சேர்ந்து புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது.

Categories

Tech |