Categories
சினிமா தமிழ் சினிமா

பாரம்பரிய உடையில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா … இணையத்தை கலக்கும் புகைப்படம்…!!!

விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ள விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர் . விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது . சமீபத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்கள் . இந்த நிறுவனத்தின் மூலம் ஒரு சில திரைப்படங்களை அவர்களே தயாரித்து வருகின்றனர் .

 

அந்த வகையில் இவர்கள் தயாரித்துள்ள திரைப்படத்தில் ஒன்று ‘கூழாங்கல்’ . சமீபத்தில் வெளியான கூலாங்கல் படத்தின் டிரைலர் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது . இந்நிலையில் ரோட்டர்டாம் நகரில் டைகர் காம்படிஷன் இன்டர்நேஷனல் திரைப்பட விழாவில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கலந்து கொண்டுள்ளனர் . அந்த விழாவில் விக்கி -நயன் இருவரும் பாரம்பரிய உடையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |