Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய கணவர்… பெண் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் அழகுதுரை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 21 வயதுடைய புவனேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் புவனேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய அழகுதுரை தனது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தமிட்டுள்ளார்.

அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் புவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |