Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய மகன்… தந்தை எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பூச்சி மருந்தை குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அணியாபரநல்லூர் பகுதியில் விவசாயியான மூக்கன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு துரைப்பாண்டி என்ற மகன் உள்ளார். இவர்கள்  குடும்பத்துடன் இணைந்து தங்களது தோட்டத்தில் உள்ள  பூக்களை பறித்து விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் மூக்கன் தனது குடும்பத்தினரிடம் நான் முன்னால் சென்று பூக்களை பறித்து வைக்கிறேன் என்று கூறி விட்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து மூக்கனின் மகனான துரைப்பாண்டி என்பவர் சிறிது நேரம் கழித்து தனது குடும்பத்தினருடன் இணைந்து பூக்களை பறிப்பதற்காக அங்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பூப்பறிக்கும் இடத்தில் மூக்கன் இல்லாததைக் கண்டு பக்கத்தில் இருந்த மின் மோட்டார் அறைக்கு  சென்று பார்த்துள்ளார். அங்கு மூக்கன் செடிகளுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்துக் குடித்து விட்டு வாயில் நுரை தள்ளிய நிலையில்  மயங்கி கீழே விழுந்து கிடந்துள்ளார்.  இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த துரைப்பாண்டி உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் அங்கு மூக்கனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று மூக்கனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மூக்கன் எதற்காக பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற விபரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |