வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுல்லக்கார பகுதியில் ராஜன் என்பது தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு டிரைவரான மகேந்திரன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகேந்திரனின் தாய் மற்றும் தந்தை இருவரும் இறந்துவிட்டதால் தனது பாட்டியான பேச்சியம்மாளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மகேந்திரன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய அவரின் பாட்டியான பேச்சியம்மாள் தனது பேரன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார்.
அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மகேந்திரனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாலிபர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விபரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.