Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய தாய்… குழந்தைக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கரும்பாறை பகுதியில் கூலித் தொழிலாளியான வடிவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 வயதுடைய சஞ்சித் என்ற குழந்தை இருந்துள்ளார். இந்நிலையில் வடிவேல் தனது குடும்பத்துடன் வேலைக்காக சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி பகுதியில் வசிக்கும் வெங்கடேஷ் என்பவரின் புதிய வீடு கட்டுவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து வடிவேல் மற்றும் புஷ்பா ஆகிய இருவரும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது குழந்தையான சஞ்சித் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது சஞ்சித் விளையாடிக் கொண்டிருந்த இடத்தில் திடீரென சுவர் இடிந்து குழந்தையின் மீது விழுந்து விட்டது.

இதில் குழந்தையான சஞ்சித் இடிந்து விழுந்த சுவரின் இடிபாடுகளில் சிக்கியதால் அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தைக் கேட்டு குழந்தையின் தாயான புஷ்பா மற்றும் தொழிலாளர்கள் அலறிக்கொண்டே ஓடிச்சென்று குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதற்குள் குழந்தையான  சஞ்சித் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |