Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய தம்பி… சிறுவனுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!!

சிறுவன் ஊருணியில் உள்ள தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள அம்பலவாசகர் பகுதியில் சுரேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மதன் மற்றும் ராகுல் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் மதன் என்பவர் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் தனது பாட்டியான கணபதி அம்மாளுடன் இணைந்து அப்பகுதியில் மாடுகளை மேய்ப்பதற்காக அழைத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் மதன் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் தனது பாட்டியுடன் இணைந்து மாடுகளை மேய்ப்பதற்கு அப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதனையடுத்து மதன் மற்றும் ராகுல் இருவரும் தனது மாடுகளை அப்பகுதியில் உள்ள ஊருணிக்கு தண்ணீர் குடிப்பதற்காக அழைத்துச் சென்றுபோது மதன் எதிர்பாராதவிதமாக ஊருணியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனைப் பார்த்த ராகுல் அலறிக்கொண்டே தனது பாட்டியிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட அவர்களின் பாட்டி அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுக்கொண்டே அப்பகுதிக்கு விரைந்து சென்றுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று ஊருணியில் உள்ள தண்ணீரில் இறங்கி மதனை தேடி சடலமாக மீட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மதனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர  மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |