Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய தந்தை… குழந்தைக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

விளையாடச் சென்ற சிறுமி ஏரியில் உள்ள தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள பூலாவரி காளியம்மன் கோவில் பகுதியில் மதியழகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவரின் வீட்டு பக்கத்தில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இவருக்கு இரண்டரை வயதுடைய வர்ஷா என்ற பெண் குழந்தை இருந்துள்ளார். இந்நிலையில் வர்ஷா தனது  வீட்டின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தை அவரின் தந்தையான மதியழகன் பார்த்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். இதனையடுத்து உள்ளே சென்று விட்டு சிறிது நேரம் கழித்து வெளியே சென்ற மதியழகன் விளையாடிக் கொண்டிருந்த தனது குழந்தை திடீரென இல்லாதை கண்டு நண்பர் மற்றும் உறவினர்களின் வீட்டில் தேடியும் வர்ஷாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

அப்போது அருகில் இருந்தவர்கள் அங்குள்ள ஏரியில் குழந்தையின்  சடலம் மிதப்பதாக மதியழகனிடம் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்ட மதியழகன் உடனடியாக அப்பகுதிக்கு சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று ஏரியில் மிதந்த வர்ஷாவின் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். இது குறித்து அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குழந்தையின்  உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல் துறையினர் அப்பகுதியில் நடத்திய விசாரணை குழந்தையான வர்ஷா வீட்டின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஏரி பகுதிக்கு சென்று கீழே இறங்கி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார் என்று தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |