பாதாள சாக்கடைகள் பளுதுயடைந்ததால் அதை சரிசெய்து தருமாறு பொது மக்கள் தீப்பந்தம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தின் பேரூராட்சிகளில் 45 வார்டுகளில் இருக்கும் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் செல்லும் வகையில் அனைத்து வார்டுகளுக்கும் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதாள சாக்கடையில் அடைப்புகள் ஏதேனும் ஏற்படாமல் இருக்க மூடிகள் கொண்டு மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த மூடிகள் பல இடங்களில் உடைந்த மற்றும் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.
இதனை தொடர்ந்து இம்மாவட்டத்தில் இருக்கும் பாதாள சாக்கடை பழுதடைந்ததால் அதனை சரிசெய்ய கோரி பொதுமக்கள் பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கோவமடைந்த பொதுமக்கள் திடீரென சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியின் மீது தீப்பந்தம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் இங்கே பெரிய பள்ளம் இருக்கிறது எனவும் கவனமாக செல்லுமாறு பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதை மூடாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் கூறி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.