Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா…? வேகமாக பரவி வரும் ஓமிக்ரான்…. பிரபல நாட்டின் அதிரடி உத்தரவு….!!

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 38 பேர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டதையடுத்து அந்நாட்டிற்குள் நுழையும் பயணிகளுக்கு கொரோனா தொடர்பான சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரானால் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு அமெரிக்காவில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டு அரசாங்கம் வெளிநாட்டு பயணிகளுக்கு மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதாவது அமெரிக்காவிற்குள் நுழையும் வெளிநாட்டு பயணிகள் கட்டாயமாக கொரோனா தொடர்பான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |